Tuesday, April 08, 2008

வாக்கிங்..

நாள் முழுதும்
வாக்கிங் செல்லும்
கீரைக்காரியும்,
நாளின் துவக்கத்தில்
அரை மணி நேரம்
வாக்கிங் செல்லும் நானும்,
தினந்தோறும் சந்திக்கும்
ஒரு திருப்பத்தில்,
ஒருவரையொருவர்
ஏறிட்டுக் கொள்வதில்லை.
ஒரு வேளை ஏறிட்டால்,
செருப்பணியாத
அவளது கால்களிலிருந்து,
தலையில்
புதர் போல மண்டி
அவளது முகம் மறைக்கும்
கீரைப் பொதி வரை
தொக்கி நிற்கும்
கேலிப் புன்னகையில்,
எனது
கேன்வாஸ் ஷூ
கருகி விடக் கூடும்.

1 comments:

balvant said...

Really touching poem.. much appreciable